கோவில்பட்டி அருகே உள்ள குருமலை காப்புக்காடு பகுதியில் புள்ளி மான், நரி, புனுகுபூனை உள்ளிட்ட வனவிலங்குகள் ஏராளமானது காணப்படுகிறது. இந்த நிலையில் துறையூர் பகுதியில் சுற்றி திரிந்த புள்ளி மானை அப்பகுதியை சேர்ந்த நாய்கள் விரட்டி சென்று கடிக்க முயன்றது. உடனே அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் அந்த மானை பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.








