தூத்துக்குடி புது தெருவை சேர்ந்த கப்பல் மாலுமி சாரோன் (20) என்பவர் எம்டி நரசிம்மா என்ற கப்பலில் மாலுமியாக வேலை பார்த்து வந்தார். கடந்த 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா கடல் பகுதியில் இக்கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த போது அவர் கப்பலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஏற்பட்ட தீ விபத்தில் அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சார்ஜா துறைமுகத்திற்கு வந்த கப்பலில் உயிரிழந்த சாரோனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி புது தெரு பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தில் மேலும் இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.