ராதாபுரம் மறு எண்ணிக்கை: அப்பாவு கோரிக்கை நீதிமன்றம் நிராகரிப்பு

0
1492

ராதாபுரம் தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்கி வழக்கை உடனடியாக விசாரிக்கவேண்டும் என்று இன்று உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் அருண் மிஸ்ரா அமர்வில் அப்பாவு தரப்பில் முறையிடப்பட்டது. அப்பாவு சார்பில் ஆஜரான காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வழக்கை உடனடியாக விசாரிக்கவேண்டும் என கோரியதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வரும் 23ம்தேதியன்று வழக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் அவசரம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு” அந்த பட்டியலிலிருந்து வழக்கை நீக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்” என அப்பாவு தரப்பு வழக்கறிஞர் சிங்வி வேண்டினார். “வழக்கை பட்டியலிடுவது தங்கள் வேலையல்ல! உச்சநீதிமன்றத்தின் பதிவுதுறையின் வேலை” என கூறி அப்பாவுவின் கோரிக்கையை நீீதிபதிகள்்நிராகரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here