ஜஸ்ட் நவ்: சென்னையில் மின்கம்பத்தில் ஏறி 4 மணி நேரம் போலீசுக்கு போக்கு காட்டிய போதை வாலிபர்

0
1118

சில மணி நேரங்களுக்கு முன்பு சென்னை காமராஜர் சாலையில் உள்ள மெரினா கடற்கரை சாலையில் உள்ள அணுகு சாலையில் மின்கம்பம் மீது வாலிபர் ஒருவர் ஏறி தற்கொலை செய்வதாக மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அவரை காப்பாற்றுவதற்காக தீயணைப்பு துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

சத்யா நகர் காவல்துறை பெண் எஸ்ஐ தரணி மெரினா கடற்கரை சாலைக்கு வந்து மின்கம்பத்தில் உயரத்தில் நின்ற நபரிடம் சுமார் நான்கு மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையில் அந்த போதை வாலிபர் மின்கம்பத்தில் பாதி தூரம் இறங்கினார்.

இதுதான் சமயமென்று தீயணைப்பு துறை போலீசார் இளைஞரை சுற்றி வளைத்து மீட்டனர் பின்னர் அவரை முதல் கட்ட சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here