விஜயபாஸ்கர் மனைவி, மகளுக்கு கொரோனா – ‘ரெய்டு’க்கு போன அதிகாரிகள் பீதி

0
1057


சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டின் இன்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா மற்றும் மூத்த மகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

இருவரும் தனி அறையில் இருந்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தகுந்த முன்னேற்பாடுகளுடன் சோதனை நடத்தினார்கள். தேவையான அளவு சமூக இடைவெளியை பின்பற்றி கைகளில் கையுறைகள் அணிந்து விசாரணை மேற்கொண்டனர்.

சோதனை நடத்துவதற்காக வீட்டுக்குள் நுழைந்த பிறகு தான் விஜயபாஸ்கரின் மனைவி மகளுக்கு கொரோனோ தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் சற்று பீதி அடைந்தனர்.

முன்னெச்சரிக்கையாக, முக கவசத்தை முறையாக அணிந்து கவச உடை அணிந்து தனது விசாரணையை மேற்கொண்டனர். விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் தகவல் கிடைத்ததும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியினுடைய முக்கிய பிரமுகர்கள் வீட்டின் வாசலில் கூட தொடங்கினால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here