அனைத்து மத நூல்களிலும் அவற்றின் புராணங்களிலும் சில உள்ளார்த்தங்கள் உண்டு. அவற்றைப் புரிந்து கொள்ளாமல், மேலோட்டமாக ‘இந்து’ சமய மக்கள் பின்பற்றுகிறார்கள். இதனால் அவர்களின் முன்னோர்களின் வரலாறு பற்றிய ஞாபகங்கள் மறக்கடிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு வெளிநாட்டிலிருந்து எழுந்துள்ளது.
நடனத்தில் சக்தியை வெற்றி கொண்ட சிவனின் கதையின் பின்னால் ‘சாக்தம்’ என்ற சக்தி வழிபாட்டை சைவ சமயம் வெற்றி கொண்டு மேலோங்கிய வரலாறு புலப்படுகிறது. அதன் விளைவே கொற்றவையின் நெற்றிக்கண் சிவனுக்கு வந்தது.
இராமாயணத்தைக் கூட வைணவ மேலாதிக்க கதையாக பார்க்கலாம் என்கின்றனர்.. சைவ நெறியில் திளைத்து நின்ற இராவணனை விஷ்ணுவின் அவதாரமான இராமன் வெற்றி கொண்ட வரலாறு அல்லவா?
அது மட்டுமல்ல, இன்றளவும் தமிழர்கள் இராவணனுக்கு மேலாக இராமனை கருதுவதில்லை. ஏனெனில் இராவணனை இலங்கையை ஆண்ட தமிழனாக பார்க்கிறார்கள் எனச் சுட்டிக் காட்டுகிறார்கள். P
ராவணனை அந்தணருக்கு பிறந்தவர் போல் காட்டினாலும், தாய் ஒரு யட்சி (இயக்கி – ஆதி தமிழச்சி) என்று ஆரியர்களும் ஒத்துக் கொள்கின்றனர். நீதிநெறி தவறாமல் ஆட்சி செய்த ராவணன் ஆகிய தங்கள் முன்னோரை இழிவு படுத்துவதை இன்னமும் தமிழ் மக்கள் பெரும்பாலோர் ஏற்கவில்லை.
அதனால்தான் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள், ‘இந்து சமய வழக்கம்’ என்ற பெயரில் தங்கள் முன்னோராகிய இராவணனைத் தீயிட்டு கொளுத்துவதை ஒப்புக் கொள்ள மறுத்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சனாதன மேலாதிக்கம் மற்றும் தீவிர வலதுசாரி இந்து தீவிரவாதம், இந்திய புலம்பெயர்ந்தோரின் குறிப்பாக சாதி ஒடுக்கப்பட்ட பின்னணியில் உள்ளவர்களின் கலாச்சாரங்களையும் பாரம்பரியத்தையும் அழித்து வருகிறது.
தீபாவளி மற்றும் ஹோலி போன்ற பண்டிகைகள், இராவணன் மற்றும் ஹோலிகா போன்ற மூதாதையர் கடவுள் மற்றும் ஒரு தலித் பெண் போன்ற உருவங்களை பேய்களாக காட்டி எரித்து – கொண்டாடப்படுகிறது,
சாதி ஒடுக்கப்பட்ட சமூகத்தவர் , மற்றும் அவர்களின் மரியாதைக்குரிய மூதாதையர் கடவுள்களுக்கு எதிரான கொடூரமான வன்முறைகள் வெளிப்படுகின்றன. இந்தச் செயல்கள் ஆஸ்திரேலியாவில் இந்தச் சமூகங்களை ஓரங்கட்டுதல், அந்நியப்படுத்துதல், சமூகப் புறக்கணிப்பு மற்றும் பாகுபாடு ஆகியவற்றை நிலைநிறுத்துகின்றன.
இத்தகைய வன்முறை கொண்டாட்டங்களை நாம் பொறுத்துக்கொள்ள முடியாது, பொறுத்துக்கொள்ளக்கூடாது. அவை ஆஸ்திரேலிய பன்முக கலாச்சாரம், உள்ளடக்கம் மற்றும் அனைவருக்கும் சொந்தமானவற்றின் முக்கிய மதிப்புகளுக்கு எதிராக செல்கின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளதோடு, தீபாவளி ஹோலி பண்டிகைகளின் அத்தகைய நடைமுறைகளை எதிர்க்க வருமாறு அழைப்பு விடுக்கிறது.