டாட்டா குழுமத்தின் நிறுவனர் ஜம்சேத்ஜீ டாட்டாவின் மகன் இரத்தன்ஜி டாட்டாவால் தத்தெடுக்கப்பட்ட நேவல் டாட்டாவின் மகனான இவர் கார்னெல் பல்கலைக்கழகக் கல்லூரியில் கட்டமைப்புப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். மேலும் ஆர்வார்டு வணிகப் பள்ளியில் வணிக மேலாண்மை பெற்றார். 1961 இல் டாட்டா குழுமத்தில் சேர்ந்து டாட்டா ஸ்டீல் தளத்தில் பணிபுரிந்தார். ஜெ. ர. தா. டாட்டா 1991 இல் ஓய்வு பெற்றவுடன் டாட்டாவின் இதர நிறுவனங்களான டாட்டா மோட்டார்ஸ் டாட்டா பவர், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா தேனீர், டாட்டா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாட்டா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் டாட்டா நிறுவனங்களுக்கும் தலைவரானார். இவரது பதவிக்காலத்தில் டாட்டா குழுமம் டெட்லி, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் கோரஸ் நிறுவனங்களை கையகப்படுத்தியது. இது இந்தியாவை மையமாகக் கொண்ட டாட்டாவை உலகளாவிய வணிகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. டாட்டா தனது வருமானத்தில் சுமார் 60-65% தொண்டுக்கு நன்கொடையாக அளித்து, உலகின் மிகப்பெரிய பரோபகாரர்களில் ஒருவராக இருக்கிறார்.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் மதிப்பிற்குரிய முன்னாள் தலைவரான ரத்தன் டாடா காலமானார். இது இந்தியா மற்றும் உலகளாவிய வணிக சமூகம் ஆகிய இரண்டிற்கும் ஒரு நீடித்த பாரம்பரியத்தை விட்டுச் சென்றுள்ளது. புகழ்பெற்ற தொழிலதிபர் அக்டோபர் 9 (புதன்கிழமை) இரவு காலமானார். அவரின் மறைவு நாட்டில் பரவலான துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் ஒவ்வொருவரும் கார் வாங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் படி அவர் ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் வழங்குவேன் என நானோ கார் என்ற மாடலை அறிமுகப்படுத்தினார். ஆனால் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு அந்த கார் கொடுக்க முடியாமல் போனது எனினும் அவரது நல்லெண்ணத்திற்கு இந்திய மக்கள் மனதில் இன்றும் அவர் நீங்கா இடம் பிடித்தார்.