4 உயிர்களை குடித்த 80 ஆயிரம் ரூபாய் கடன்

0
643

கடன் அன்பை முறிக்கும், சமயத்தில் உயிரையும் பறிக்கும்.
சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த கோவிந்தசாமி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்த முடியாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
எனவே, குடும்பத்தோடு உயிரை மாய்த்துக்கொள்ள திட்டமிட்டார். அவர், மனைவி சுப்பம்மாள், 2 மகன்கள், ஒரே மகளான கலைவாணி ஆகியோர் விஷம் குடித்ததோடு, கலைவாணியின் இரு குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனர்.
சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த கலவாணியின் கணவர் ஆறுமுகம், வீட்டுக்குள் 4 பேர் இறந்து கிடப்பதையும், கலைவாணியும் இரு குழந்தைகளும் உயிருக்கு போராடுவதையும் கண்டு துடித்துப்போனார். உடனடியாக அவர்கள் மூவரையும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
இந்த துயர நிகழ்வு தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here