ரோமன் கத்தோ லிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயராக பணியாற்றிய அந்தோணி சாமி மதுரை ஆர்ச் பிஷப்பாக கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து பாளையங்கோட்டை மறை மாவட்ட நிர்வாகியாக (அப்போஸ்தலிக்க பரிபாலகர் ) புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தையாக பணியாற்றிவந்த மோட்ச ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திருத்தந்தையின் இந்திய தூதரக அலுவலகம் வெளியிட்டது. அவர் இன்று மறை மாவட்ட ஆலோசனை குழு முன்னிலையில் நம்பிக்கை அறிக்கை செய்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
அருட்தந்தை மோட்ச ராஜன், தென்காசி மாவட்டம் மீன் துள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். இதற்கு முன்பு திருநெல்வேலி சமூக சேவை சங்க இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.















