அயோத்தி வழக்கில் நாளை காலை 10.30க்கு தீர்ப்பு

0
965

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது. காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக நாடுமுழுவதும் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் காவல் மிகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தீர்ப்புக்காக கொண்டாட்டம் நடத்துவதோ, துக்கம் தெரிவிப்பதோ கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here