பிரஸ் கார், சாதா உடை _ லலிதா ஜூவல்லர்ஸ் நகையை பறிக்க பெங்களூரு போலீஸ் பக்கா பிளான்

0
696

லலிதா ஜூவல்லர்சில் நகை கொள்ளையடித்த கும்பலின் தலைவர் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரை காவலில் எடுக்க தமிழக போலீசார் போகுமுன்பு, பெங்களூருவில் முருகன் நடத்திய கொள்ளை சம்பந்தமாக தேடிய பெங்களூரு போலீசார் அவரை கையில் எடுத்தனர்.
லலிதா ஜூவல்லர்ஸ் கடையில் முருகன் கொள்ளையடித்த நகையை பிடுங்கி தங்கள் அவரை அழைத்துக்கொண்டு இரு கார்களில் சாதாரண உடையில் வந்தனர். ஒரு காரில் புத்திசாலித்தனமாக பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டனர்.
பிரதான சாலையில் வந்தால் தமிழக போலீஸ் கண்ணில் பட்டுவிட நேரிடும் எனப்பயந்து, சேலம், ஆத்தூர் வழியாக பெரம்பலூருக்கு வந்தனர்.
அங்கு முருகன் கொள்ளையடித்த நகையை முட்புதரிலிருந்து எடுத்துக்கொண்டு திரும்பும்போதுதான், முருகனை பெங்களூரு போலீஸ் கையிலெடுத்த தகவல் அறிந்து தேடிக்கொண்டிருந்த தமிழக போலீசாரின் ரோந்தில் சிக்கினர்.
ஆனாலும், எளிதில் முருகனையும், நகையையும் ஒப்படைக்கவில்லை. கடும் மிரட்டல், லலிதா நகைக்கடையினரின் அடையாளம் காட்டலுக்கு பின்பே வேறு வழியின்றி விட்டனர். ஆனாலும், முருகனை பெங்களூரு வழக்கில் காவலில் எடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here