மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு இன்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியதையடுத்து வரும் 20 முதல் 22ஆம்தேதி வரை நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக தேனியில் ஏற்பாடு செய்திருந்த வைகோவின் பிரச்சார கூட்டம் ரத்து செய்யப்பட்டது.