அத்திப்பழம் சீமை அத்தி, நாட்டு அத்தி என 2 வகைப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் காய்க்கிறது. இது உடலுக்கு ஜீரண சக்தியையும் சுறுசுறுப்பையும் தருகிறது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி, ஈரல், நுரையீரலிலுள்ள அடைப்புகளையும் நீக்குகிறது. மேலும் வெட்டை நோயின் ஆணிவேர் அற்றுப்போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
தினசரி 2 அத்திப்பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்திப்பழ விதைகளைச் சாப்பிடலாம். நாள் பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். மது, போதைப் பழக்கங்களால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் வினிகரில் ஒருவாரம் வரை ஊற வைத்து தினமும் இரண்டுபழங்கள் வீதம் சாப்பிடலாம்.
சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் , ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப்பழம் பயனுள்ளது. மூலநோயைக் குணப்படுத்த அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து தேன்கலந்து சாப்பிடலாம். அத்தி இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால், பித்த நோய்கள் குணமான்கின்றன. உடலின் எந்தத் துவாரத்தில் இருந்து ரத்தம் வெளியேறினாலும் இது கட்டுப்படுத்தும். வாய்ப்புண், ஈறுகள் சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிக்கலாம்.