கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கோவில்பட்டியில் பெரும்பாலான பெண்கள் மற்றும் பொது நிலையினர் கலந்து கொண்ட போராட்டம் நடைபெற்றது.
தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக நட்சத்திர கலைஞர்களை அரங்கிற்குள் அடைத்து வைத்து அவர்களின் அந்தரங்க நடவடிக்கைகளை கேமராக்களால் படம் பிடித்து தனிமனித உரிமையையும் ஒழுக்கத்தையும் மீறி நடத்தப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்.
இது தனி மனித உரிமைக்கு புறம்பானது. சகோதர சகோதரிகளுடன் இருந்து தொலைக்காட்சியில் பார்க்க முடியாத இந்த ஆபாச, இரட்டை அர்த்தம். தொனிக்கும் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன் தலைமையில் செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபர், மகளிர் குழுக்களின் கூட்டமைப்பு தலைவி மேரி ஷீலா உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோசமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் கோரிக்கை மனு அளித்தனர்