நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு
விடுத்துள்ள அறிக்கை
நெல்லை மாவட்டத்தில் கொரானோ நோய்த் தொற்று பரவலை தடுக்கும் பொருட்;டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் பாராசிட்டமால், அசித்ரோமைசின் மற்றும் ஐவர்மெக்டின் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றி விற்பனை செய்யக் கூடாது
மேற்குறிப்பிட்ட மருந்துகளை வழங்கும் பொழுது மருந்து பெறுபவரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்களை கட்டாயம் தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும். விவரத்தை மருந்துகள் ஆய்வாளருக்கு தினசரி தெரிவிக்க வேண்டு;ம். தவறும் பட்சத்தில் மருந்து கடையின் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்









