தடையற்ற வர்த்தகம் யாருக்கு சாதகம்?

0
639

மோடி _  ஜி ஜின் பிங் சந்திப்பில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்ய சீனா தரப்பில் முன்மொழியப்பட்டுள்ளது. இதன்மூலம் சீனப்பொருட்கள் தட்டின்றி இங்கு சந்தைப்படுத்தப்படும். அதே வேளை இந்திய பொருட்களும் சீன சந்தையை பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
ஆயினும், ஏழை, நடுத்தர மக்கள் மிகுதியாக வசிக்கும் இந்தியாவில் விலை குறைவான சீனப்பொருட்கள் எளிதில் முக்கிய இடம் பிடித்துவிடும்.
அது மட்டுமின்றி, வீட்டு உபயோகப்பொருட்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை சீனத்தயாரிப்பு அதிகம். இந்தியாவில் உற்பத்தி தன்னிறைவு இல்லை. எனவே, தேவைக்கேற்ப வழங்க சீனா அளவுக்கு இந்தியா தயாராக இல்லை.
மேலும், வகை, வகையான பொருட்கள் அந்தந்த தரத்தில் கிடைக்கும் வகையில் குடிசை தொழிலாகவும், கனரக தொழிலாகவும் ஒரே வகை பொருட்களை தயாரிக்கும் வகையில் சீன தொழில் வளர்ச்சி உள்ளது. எனவே, விருப்ப தேர்வு அடிப்படையிலும் சீனப்பொருட்கள் முதலிடம் பெற்றுவிட வாய்ப்புள்ளது.
எனவே, தடையில்லா வர்த்தக விடயத்தில் ஆழமாக சிந்தித்தே முடிவெடுக்கவேண்டும் என பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here