சென்னையில் ஜி ஜின் பிங்

0
1493

ஜி ஜின்பிங் ஏர் சைனா தனி விமானத்தில் சென்னைக்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்திலேயே சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவரை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சபாநாயகர் தனபால் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். ஆளுநர், முதலமைச்சருடன் மட்டுமின்றி அதிகாரிகளுடனும் சில நிமிடங்கள் பேசினார். தவில், நாதஸ்வர இசைக்கலைஞர்கள் இசை வரவேற்பு அளித்தனர்.கலைக்குழுவினரை நோக்கியும் கையசைத்தார். நிதானமாக ஆடல், பாடலை ரசித்தார். அடுத்து பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அங்கேயே சிறப்பு ஒலிலாட்டம், மயிலாட்டம், பரதம், கரகம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அங்கிருந்து விமான நிலையத்தின் சிறப்பு வாயிலான 5ஆவது வாயில் வழியாக அவர் அழைத்துவரப்பட்டார். அவருக்காக வந்த பிரத்யேகமான கருப்பு காரில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் ஓட்டலுக்கு புறப்பட்டார்.
சாலையின் இருபுறமும் மாணவ, மாணவிகள் இந்திய, சீன கொடியசைத்தனர்.
அவர் வருகையை முன்னிட்டு விமான நிலையத்திலிருந்து ஓட்டல் வரையிலான சாலை போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கு முன்பே முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது.
இன்று மாலை 4,30 மணிக்கு பிரதமர் மோடியும் ஜி ஜின் பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here