பேய்குளம் பகுதியில் தொடரும் வெறிநாய் அட்டகாசம்

0
559

பேய்குளம் பகுதியில் இரவு நேரங்களில் வெறி நாய்கள் ஒன்று சேர்ந்து ஆட்டுக்கிடையில் ஆடுகள் மட்டும் குட்டிகளை கடித்து குதறுவது வாடிக்கையாக உள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பேய்குளம் அருகே 8 ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் பலியாகின மேலும் எட்டு ஆடுகள் காயம் அடைந்தன.

இந்நிலையில் இன்று அதிகாலை வெறிநாய்கள், செங்காண் மகன் கிருஷ்ணன் ஆட்டுக்கிடையில் புகுந்து குட்டிகள் அடைத்து வைத்திருக்கும் கூண்டுகளை கடித்து உள்ளே புகுந்து அங்கிருந்த 18 பெரிய செம்மறி ஆட்டு குட்டிகளை கடித்து குதறி உள்ளது இதில் 18 குட்டிகளும் பலியாகின.மேலும் சில குட்டிகள் படுகாயம் அடைந்தது

இது குறித்து அரசு சிறப்பு கவனம் மேற்கொண்டு இப்பகுதியில் வெறி நாய்களின் அட்டகாசத்தை அடக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க கோரியும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here