புதுடெல்லியில் வெளியுறவுத்துறை ரீதியான 100 நாள் சாதனை குறித்து செய்தியாளர்களுக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அளித்த பேட்டியில்,
கடந்த 100 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு இலக்குகளுக்கும், வெளியுறவு கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதையே மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்.
இந்தியா – அமெரிக்கா இடையேயான நட்புறவு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி, ஒருநாள் அது இந்தியாவின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.















