லலிதா ஜீவல்லர்ஸ் நகை கொள்ளையின் சூத்ரதாரி முருகன் பெங்களூரு சிறையில் சரண்டைந்தார். முன்னதாக அவரது மருமகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார்.
முருகனின் குடும்பத்தினர் 15 பேரை பிடித்து இரு வாரமாக கடுமையாக விசாரித்து வரும் நிலையில் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு அவர் சரணடைந்துள்ளார்.
அவர் மீது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளன.















