இந்திய சிறுமியை வன்கொடுமை செய்த பாகிஸ்தானியர்

0
1436

துபாயின் குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ​​34 வயதான இந்திய பெண் ஒருவர், கணிதப் பாடம் டியூசன் எடுத்து வருகிறார். அவரிடம் இந்திய சிறுமி ஒருவர் டியூசன் படித்து வந்தார்.

சம்பவத்தன்று டியூசனுக்கு வழக்கமாக வரும் இந்திய சிறுமி புத்தகங்களை மறந்து வீட்டில் வைத்துவிட்டு வந்ததால் அதை எடுத்து வர மீண்டும் வீட்டிற்கு சென்றார்.

புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்த சிறுமி பாகிஸ்தான் டெலிவரி பாய் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இது குறித்து சிறுமி டியூஷன் ஆசிரியையிடம் கூறி உள்ளார். அந்த ஆசிரியை குடியிருப்பில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்து போலீசில் புகார் தெரிவித்தார்.

போலீசார் அந்த நபரை கைது செய்தனர். பின்னர் அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் குற்றச்சாட்டை பாகிஸ்தானிய நபர் துபாய் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். நீதிமன்றம் அவருக்கு வரும் செப்டம்பர் 16-ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here