நீட் ஆள் மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெஙக்டேசன் ஆகியோர் மீது ஆள் மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தது, சதித்திட்டம் தீட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.