பாம்புக்கு பயந்து பணம், நகை பறிகொடுத்த ஆசிரியை

0
499

மணப்பாறை காமராஜர் நகரை சேர்ந்த மரிய புஷ்பம் உசிலம்பட்டி பள்ளியில் தலைமை ஆசிரியையாக உள்ளார். கணவரை இழந்து தனியாக வசித்துவருகிறார். சமீபத்தில் பெய்த மழையால் வீட்டை சுற்றி புதர் வளர்ந்து பாம்புகளின் புகலிடமானது. அதிலிருந்து ஒரு பாம்பு மரிய புஷ்பம் வீட்டுக்குள் புகுந்துவிவிட்டது.
இதனால் பயந்துபோன பரிய புஷ்பம் இரவில் பக்கத்து வீட்டில் தங்கினார். விடிந்து போய் வீட்டை பார்த்தால் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 65 சவரன் நகையும் 49 ஆயிர்ம ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. பாவம், பாம்புக்கு பயந்து பணத்தை இழந்து பரிதவித்த ஆசிரியை போலீசில் புகார் செய்து திருடன் சிக்குவானா என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here