உத்தரபிரதேச முன்னாள் முதல் – மந்திரியும் , பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி நாட்டில் வகுப்புவாத சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டி டுவிட் செய்து உள்ளார்.
மாயாவதி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- காங்கிரஸ் கட்சியின் இரட்டை நிலைபாட்டால் நாட்டில் வகுப்புவாத சக்திகள் வலுவடைந்து வருகின்றன. ஏனெனில் வகுப்புவாத சக்திகளை பலவீனப்படுத்துவதற்கு பதிலாக, காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் சக்திகளை பலவீனப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் ‘ என கூறி உள்ளார்.















