சாத்தான்குளம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தாமதமாக வரும் அதிகாரிகளால் பொதுமக்கள் அவதி

0
831

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தினமும் 10-க்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவாகும்

இந்த நிலையில் இன்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மதியம் வரை பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக அங்கு வந்திருந்த பொதுமக்கள் பத்திரப்பதிவுக்காகவும் வில்லங்க சான்றிதழ் பார்க்கவும் காத்திருந்து அவதி அடைந்தனர்.

இதுபோல் அடிக்கடி நடப்பதால் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here