உடன்குடி அருகே அனல்மின் நிலைய பின்பகுதியில் உள்ள தருவை ஏக்கரா தோட்ட பகுதியில் பயங்கரமானதீ விபத்து நடந்துள்ளது. தற்போது தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
அப்பகுதியில் கடல் மின் நிலைய திட்டத்திற்கு பிறகு தென்னந்தோப்புகள் குறைந்து விட்டாலும், தற்போதும் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கரில் தென்னை உள்ளது. எனவே, தீயை உடனடியாக அணைக்காவிட்டால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மின் கம்பிளில் தென்னை ஓலை உரசி தீப்பிடித்ததாகவே முதற்கட்ட தகவல் தெரிகிறது.









