வறுமையின் கொடுமை: 2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற தாய்

0
1345

 

வறுமையின் கொடுமையால் 3 குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவு கொடுத்துவிட்டு தானும் உண்டாள் ஓர் தாய். இதில், இரு குழந்தைகள் இறந்துவிட, ஒரு மகளுடன் தானும் தீவிர சிகிச்சையில் உள்ளாள்.
போடி ஜக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமியின் கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஏலக்காய் பறித்து கூலி வாங்கி 3 மகள்களை வளர்த்துவந்தாள் லட்சுமி. ஆயினும் வறுமையில் தவித்ததால் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்தாள். தன இறந்தபின்பு குழந்தைகள் தவிக்குமே என்ற தாய்மை உணர்வில், அனைவரையும் கொன்றுவிட்டு தானும் சாகும் வன்முடிவுக்கு வந்தாள்.
அதன்படி குழந்தைகளுக்கு நஞ்சு கலந்த உணவை ஊட்டிவிட்டு தானும் உண்டாள். வாந்தியெடுத்து மயங்கி விழுந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அதில், அனுஷியா, ஐஸ்வர்யா என்ற இரு மகள்கள் வழியிலேயே இறந்துவிட்டனர். லட்சுமிக்கும் மற்றொரு குழந்தையான அட்சயாவுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here