பெரியதாழை கடற்கரையில் புலி பீதி

0
1206

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியத்தாழை மீனவ கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து விட்டதாக அப்பகுதியில் உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் சிறுத்தை நடமாடுவது போல உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இதுகுறித்து புகைப்படம் வைரலானது தொடர்ந்து அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள் மற்றும் ஊர் நல கமிட்டியினர் நடத்திய விசாரணையில் இது கூகுள் ஜெமினி அப்ளிகேஷனால் சித்தரிக்கப்பட்ட ஒரு புகைப்படம் என தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here