மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து குற்றால மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் வருவதால் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதனால் பழைய குற்றாலம், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.








