அரியலூர் செங்குந்தபுரத்தை சேர்ந்த கணவரை இழந்த மூதாட்டி பட்டம்மாள் (75). இவருக்கு இரு மகன்கள், இரு மகள்கள். அனைவருக்கும் திருமணமாமிவிட்டது.
பிள்ளைகள் யாரும் வயதாகி உடல் நலம் குன்றிய பட்டம்மாளை பராமரிக்க முன்வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அங்கிருந்து பிள்ளைகளை பார்க்கும் ஆவலில் பட்டம்மாள் ஊருக்கு வந்தார். டீக்கடை நடத்தும் சண்முகம் சில நாட்கள் அவரை கவனித்துவிட்டு சகோதரி சகுந்தலா வீட்டுக்கு அனுப்பினார். அவரும் சில நாட்கள் பராமரித்துவிட்டு மீண்டும் சண்முகம் வீட்டில் கொண்டுவிட்டார்.
சண்முகம், ஆசிரியரான சதாசிவம் வீட்டுத்திண்ணையில் தாயை கிடத்தினார். ஆசிரியர் சதாசிவம் தாயை சாலையில் வீசிவிட்டார். மீண்டும் இரக்கமுள்ள பொதுமக்கள் அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க முனைந்துள்ளனர்.













