ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் – காங். எம்பி ராபர்ட் புரூஸ் திடீர் சந்திப்பு

0
380

நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸ் மத்திய அமைச்சர் எல்.முருகனை திடீரென நாகர்கோவிலில் சந்தித்தார்.

கட்சி நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் சென்ற எல்.முருகனை எம்.பி., ராபர்ட் புரூஸ் சந்திக்க, அவரை சாப்பிட வருமாறு எல்.முருகன் அழைத்தார்.சாப்பிட்டு வந்ததாக காங்கிரஸ் எம்.பி., ராபர்ட் புரூஸ் சமாளித்தார்.

ஒன்றிய அமைச்சரின் அறைக்குள்ளே சென்று நலம் விசாரித்து, அளவளாவி திரும்பினார் ராபர்ட் புரூஸ்.

காங்கிரஸ் எம்.பி., திடீரென பாஜக அமைச்சரை சந்திக்க வந்ததால் தொண்டர்கள் குழப்பமடைய,’நமது ஊருக்கு வந்த அமைச்சரை சம்பிரதாயமாக சந்திக்க வந்ததாக கூறிச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here