அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இந்திய தூதரக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரண்டு மூவர்ணக் கொடிகளை கைகளில் ஏந்தி தேச பக்தி பாடல்களைப் பாடி சுதந்திரத்தைப் புகழ்ந்தனர். இதே போன்று லண்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்திலும்இந்தியாவின் 73வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது