கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் 2019ல் தாசில்தாராக பணிபுரிந்த தயாளன், முறைகேடாக நேர்காணல் நடத்தி கிராம உதவியாளர்களை பணி நியமனம் செய்ததாக புகார் எழுந்தது.
இந்த தவறுக்கு அப்போது அலுவலகத்தில் பணிபுரிந்த பாண்டியன், தசரதராஜன் ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.
கிராம உதவியாளர் பணி நியமன முறைகேடு தொடர்பாக புகார் எழுந்ததையடுத்து, 2019 ஆகஸ்ட் 9ஆம் தேதி கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்திலிருந்து நேர்காணலின் ஆவணங்களை தயாளன், பாண்டியன், தசரதராஜன் ஆகியோர் எடுத்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன், தாலுகா அலுவலகத்தில் காணாமல் போன ஆவணங்களை கண்டுபிடித்து தருமாறு சென்னை ஐகோர்ட்டில் மனு அளித்தார்.
சென்னை ஐகோர்ட் உத்தரவின் பேரில்
தற்போது விழுப்புரம் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராக பணிபுரியும் தயாளன், உளுந்துார்பேட்டை தேர்தல் துணை தாசில்தாராக பணிபுரியும் பாண்டியன், கல்வராயன்மலை முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரியும் தசரதராஜன் ஆகியோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.













