2 புதிய மாவட்டங்கள் உதயம்…நெல்லை தம்பதியனருக்கு விருது..

0
1436

சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் முதலமைச்சர் பழனிசாமி தனது சுதந்திர தின உரையில் சுதந்திரத்திற்கு பாடுபட்ட தமிழக தியாகிகளை நினைவு கூற வேண்டும் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பெருங்குடி ஏரி பாதுகாக்கப்படும் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி திணிக்கப்பட கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும் திருப்பத்தூர், ராணிப்பேட்டை என புதிய மாவட்டங்கள் உதயமாகும் . கே.வி. குப்பத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாகும் –

தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்படுகிறது மக்கள் பயன்பாட்டிற்காக மேலும் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது இதுவரை 1 கோடி பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.16,000 ஆக உயர்த்தப்படும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்டத்தின் மூலம் ஒரு மாத்திற்குள் மனுக்கள் மீது தீர்வு காணப்படும் என்றார்

தொடர்ந்து துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை கடலூர் மீன் வளத்துறை துணை இயக்குனர் ரம்யாலட்சுமிக்கு வழங்கப்பட்டது. அதீத துணிவுக்கான முதலமைச்சரின் சிறப்பு விருதை, நெல்லையில் கொள்ளையர்களை துணிவுடன் விரட்டியடித்த சண்முகவேல் – செந்தாமரை தம்பதியினருக்கு முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here