நெல்லை புதிய பஸ் நிலையத்திற்குள் பயணிகளை ஏற்ற வரும் பைக்குகள் ஆட்டோக்கள் பிளாட்பாரம் வரை வருவது சகஜமாகிவிட்டது. அதுவும் வேகமாக டூவீலரில் வருவதால் அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது.
இன்று சற்று நேரத்திற்கு முன்பு திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளம் செல்லும் பேருந்து புறப்பட ஆயத்தமான நிலையில் பைக்கில் வந்த வாலிபர் பஸ் மீது மோதினார். நல்லவேளையாக காயம் எதுவும் ஏற்படவில்லை. நடத்துனர் இறங்கி சத்தமிடுவதற்குள் அவர் பைக்கை பரத்திக் கொண்டு சென்று விட்டார்.








