மதுரை அரசு மருத்துவமனையில் 37 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

0
471

தென்மாவட்டத்தின் பெரிய மருத்துவமனையான மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில் மதுரை மட்டுமின்றி தேனி,திண்டுக்கல்,ராமநாதபுரம், சிவகங்கை,தூத்துக்குடி, நெல்லை,கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு திறக்கபட்டுள்ளதாகவும்,இந்த சிறப்பு வார்டில் இன்று மதிய நிலவரப்படி தொற்றால் பாதிக்கப்பட்ட 37 கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,கர்ப்பிணித் தாய்மார்களை கண்காணித்து சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டில், தனி மருத்துவக் குழு மூலம் தொடர்ந்து கண்காணிக்கபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

கொரோனா முதல் அலையின் போது மதுரை அரசு கொரோனா மருத்துவமனையில் தொற்று பாதிக்கப்பட்ட 266 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here