வங்கக்கடலில் காற்றழுத்த மண்டலம் காரணமாக நாளை தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கழை பெய்யும். திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட் அலர்ட் என்னும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொடைக்கானல் சுற்றுலா பயணத்துக்கு இரு நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தூண் பாறை, குணா குகை, பேரீஜம் ஏரி போன்ற இடங்களுக்கு இன்று மாலை முதல் அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலும் நாளை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. உதகை மலை ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது.













