பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க கோரிய நளினியின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்திரவிட்டுள்ளது. ராஜீவ்கந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசுக்கு நளினி மனு அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய மனுவை பரீசீலித்து தங்களை விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் ஆகியோர் அமர்வில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில், 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என்று நளினியின் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழக அரசின் எதிர் வாதத்தில் 7 பேரை முன்கூட்டி விடுதலை செய்யும் உரிமையை கேட்க முடியாது என்றும் அது அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்திரவிட்டது.












