தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் பகுதிக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் காய்கறி மார்க்கெட் பகுதிக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் தங்களது இருசக்கர வாகனங்களை ரோட்டோரங்களில் நிறுத்திவிட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இதனை வரைமுறைப்படுத்த வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.








