செல்போன் டவர் ஒப்பந்தம் வாங்கிதருவதாக கூறி ரூ.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தரகரை கடத்திய இருவர் கைது

0
507

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசவரலூ இவர் செல்போன் டவர் அமைப்பது போன்ற பல ஒப்பந்தங்களை பணம் பெற்றுக் கொண்டு பெற்றுத்தரும் இடைத்தரகராக செயல்பட்டு வருகிறார்

இவருக்கும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன் டவர் அமைக்க ஒப்பந்த உரிமை பெற்றுத் தருவதாக கூறி மோகனிடம் வெங்கடேசவரலூ சுமார் 70 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு அதில் முப்பது லட்ச ரூபாய் வெங்கடேசவரலூ எடுத்துக்கொண்டு மீதமுள்ள 40 லட்ச ரூபாயை டெல்லியை சேர்ந்த பிஎஸ்என்எல் டவர் அமைக்க ஒப்பந்த உரிமம் தரும் நபர் ஒருவரிடம் வழங்கியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் டவர் அமைப்பது தொடர்பாக அல்லது உரிமம் பெறுவது தொடர்பாக வெங்கடேசவரலூவிடம் மோகன் கேட்கும்போதெல்லாம் இப்போது அப்போது என அவர் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தொழிலதிபர் மோகன் எனக்கு உரிமம் வேண்டாம் நான் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார் மேலும் பல போராட்டங்கள் கடந்து ஆறு மாத காலத்தில் சுமார் 25 லட்சம் பணத்தை வெங்கடேசவரலூவிடமிருந்து மோகன்ராஜ் பெற்றுள்ளார்.

ஒருகட்டத்தில் மோகன்ராஜ் கண்டிப்பாக என் பணம் இந்த மாதமே எனக்கு வேண்டும் என கூறியுள்ளார் இதனால் வெங்கடேசவரலூ மோகனை திருப்பதிக்கு வரவழைத்துள்ளார் திருப்பதியில் பேசி அனைத்து பணத்தையும் திருப்பித் தருவதாக தெரிவித்துள்ளார் இதை நம்பி மோகன் திருப்பதி செல்ல திருப்பதியில் வெங்கடேசவரலூ 10 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மோகன் மீதி பணத்தை உன்னிடம் பெறுவதற்கு பல காலங்கள் ஆகும் எனவே நீ என்னுடனே வந்து அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்த பிறகு நீ செல்லுமாறு கூறி மோகன் தனி காரிலும் வெங்கடேசவரலூ தனி காரில் அழைத்துகோண்டு திருத்தணி ராணிப்பேட்டை வழியாக ஈரோடு சென்றுள்ளனர்

இதுகுறித்து வெங்கடேசவரலூ தங்களது உறவினர்களுக்கு தகவல் அளிக்கவே அவர்கள் ஈரோடு செல்லும் வழியில் அருகாமையில் இருந்த காவல் நிலையமான ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர் அதனடிப்படையில் வெங்கடேசவரலூ ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் அருகே போலீசாரால் மீட்கப்பட்டார். மேலும் வெங்கடேசவரலூவை அழைத்துவந்த ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் செல்வராஜ் (28) வாலாஜா அடுத்த நந்தியாலம் பகுதியைச் சேர்ந்த அருண்(34) ஆகியோர் வெங்கடேசவரலூவை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் மோகனை தேடி வருகின்றனர் இந்தச் சம்பவம் அனைத்தும் திருப்பதியில் நடைபெற்றதால் இந்த வழக்கு ஆந்திர மாநிலம் திருப்பதி மாற்றப்பட உள்ளதாக காவல் துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here