பள்ளிக்கரணையில் திருமண வரவேற்புக்கு வைத்த பேனர் விழுந்து பொறியாளர் சுபஸ்ரீ மடிந்ததை மாநகராட்சியும் மாநகர காவல் துறையும் முதலில் அசட்டையாக கையாணடன. நீதிமன்றம் வைத்த குட்டுக்கு பின்னும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
அது தொடர்பான மற்றொரு வழக்கிலும் நீதிபதி கண்டனத்தை தெரிவித்தபின்பு இப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகு மீது ‘கடும்’ நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது. பேனர் வைத்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். இந்த ‘கடும்’ நடவடிக்கையால் இன்ஸ்பெக்டர் மிகவும் ‘கஷ்டம்’ அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தலைமறைவான நிலையில், இன்னமும் அவரை போலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.