:
கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள நாஞ்சில் கலையகம் சார்பில்
பொற்றையடியில் உள்ள அரங்கத்தில், முத்தமிழ்ச் சங்கமக் கலை இலக்கிய விழா விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில், கராத்தே மாஸ்டர் ஜெயகர்ணனுக்கு “இதழியல் இதயம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அந்த விருதை திரைப்பட இயக்குநர் நாஞ்சில் அன்பழகன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாஞ்சில் கலை இலக்கியக்கழகத்தின் நிறுவனர் மயூரி சீத்தாராமன், தலைவர் கவிஞர் ஈஸ்வரன், செயலாளர் கவிஞர் உமையவள்தாசன், முனைவர் சுபத்ரா செல்லத்துரை, இந்திய பாரம்பரிய கலாச்சார பேரவையின் தலைவர் முதற்சங்கு சிவனி சதீஷ், ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும், பாடகி உமா, சோபிகா, நாடக நடிகை அம்பிகா, எழுத்தாளர் ஜூடி சுந்தர், “லிம்கா” சாதனையாளர் மதிமயக்கும்பெருமாள், கவிஞர்கள் சுவாமிதாஸ், சரவை ஞானசேகரன், மோகன், புலவர் மதுப்பிரியா, கவிதாயினி விஜி பூரண்சிங் உட்பட பலர் கலந்து கொண்டனர் .













