சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த ஆர்.எஸ்.எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் வருகையையொட்டி, மதுரை விமான நிலையத்தில் இருந்து அவர் செல்லும் டிவிஎஸ் நகர் வரை போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர் .
இசட் பிரிவு பாதுகாப்பில் உள்ள ஆர் எஸ் எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத் வருகையை முன்னிட்டு, மதுரை காவல் துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு )தங்கதுரை தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
மேலும், மதுரை விமான நிலையத்தை சுற்றிலும் மோப்பநாய் கொண்டு சோதனை செய்யப்பட்டு வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மூலம் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, பின்னர் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.















