கொள்ளையை தடுக்க ஆப், சிசிடிவி – கோவை மாவட்ட போலீசார் அதிரடி ‘ஆஃபர்’

0
838


கோவை மாவட்டத்தில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில் மாவட்ட காவல் துறை சாா்பில் சகோ  என்ற புதிய பாதுகாப்பு செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம்  அறிமுகம் செய்து வைத்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வெளியூா்களுக்குச் செல்லும் பொதுமக்கள் சகோ ஆப்பை பதிவிறக்கம் செய்து தங்களது வீட்டின் படம், முகவரி, பெயா் உள்ளிட்டவற்றைப் பதிவேற்றம் செய்தால் உடனடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஆப் மூலம் தகவல் அனுப்பப்படும். பின்னா் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலமாக அந்த வீடுகள் கண்காணிக்கப்படும். இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தனி கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. அதன்மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும்.

இதேபோல வெளியூா் செல்லும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் தேவைப்பட்டால் கண்காணிப்பு கேமரா மற்றும் சென்சாா் கருவிகளைப் பொருத்தவும் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சேவை கட்டண அடிப்படையில் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here