நெல்லையில் நாம் தமிழர் கட்சி விவகாரங்களில் தலையிட்டதாக புகார் எழுந்த நிலையில் நில எடுப்பு தாசில்தார் செல்வகுமார் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் விரிவான விசாரணைக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
செல்வகுமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திசையன்விளை தாசில்தாராகவும், அதன் பிறகு நான்குனேரி நதிநீர் இணைப்பு தாசில்தாராகவும் இருந்தவர்.
இவர் மாற்று பெயரில், அதாவது செல்வன் குமரன் என்கிற பெயரில் நாம் தமிழர் கட்சியில் செயல் பட்டு வந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 2024 ல் மாவட்ட கலந்தாய்வு சீமான் தலைமையில் நடந்த போது இவர் சீமானுடன் சேர்ந்து எடுத்த படம் இப்போது பிரச்சனைக்குரியதாகியுள்ளது.
ஏற்கனவே சாட்டை முருகன் ஜாதி பிரச்சனையை பேசியதாக நெல்லை மாவட்டத்தில் இரு பொறுப்பாளர்கள் நாம் தமிழர் கட்சியை விட்டு விலகியுள்ள நிலையில், தாசில்தார் செல்வகுமார் விவகாரமும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.