நள்ளிரவில் சலங்கை சத்தத்தால் நடுங்கும் கோவை மக்கள்

0
989



கோவை கணபதி மாநகர் பகுதியில் 500-க்கும் மேல் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த நிலையில் கணபதி மாநகர் பிளாக் 1- ல் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 3 மணிவரை சலங்கை ஒலி சத்தம் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கேட்பதாக அங்குள்ள பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:- நள்ளிரவில் தொடர்ந்து சத்தம் கேட்பதால் நிம்மதியாக தூங்க முடிவதில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. பலர் பேய் நடமாட்டமா என்று பயப்படுகின்றனர். அல்லது திருட்டு கும்பல் திசை திருப்பி திருடுவதற்கு திட்டமிட்டுள்ளதா என்று தெரியவில்லை. இங்குள்ள பெரும்பாலான வீடுகளில் ஓய்வு பெற்றவர் உள்ளதால் வெளியே வந்து பார்க்க பயப்படுகின்றனர்.

இது குறித்து சரவணம்பட்டி போலீசாரிடம் போன் வழியாக தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள், குடியிருப்புவாசிகளுக்கு தைரியம் அளித்து, அங்கு காவலுக்கு போலீ சாரை நியமிப்பதாக கூறிச்சென்றனர்.

அந்த பகுதியில் உள்ள
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவ்வாறு செய்தால் உண்மை துலங்கும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here