நாங்குநேரி தொகுதியில் போட்டியிட விரும்பும் கட்சியினர் நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் மனு அளிக்கலாம் என்று முன்பு கூறப்பட்டிருந்தது.
தற்போது சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்களை பெற்று நிரப்பி கொடுக்குமாறு தலைமை அறிவித்துள்ளது. வரும் 25-ஆம் தேதிக்குள் மனுக்களை வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது













