நெல்லையில் 20 நாட்களில் போதை பாக்குகள் விற்பனை செய்த 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாநகரில் கடந்த 20 நாட்களில் போதை பாக்குகளை விற்பனை செய்த 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1 டன் 120 கிலோ போதைப் பாக்குகள் மற்றும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருளை முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக காவல் கட்டுபாட்டு அறைக்கு 94981 81200 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.









