கோவில்பட்டி நகரில் பல்வேறு இடங்களில் பகலில் தெரு விளக்குகள் எரிந்து கொண்டு இருக்கின்றன. நகராட்சி ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தும் நடவடிக்கை இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இரவில் எரியாத விளக்குகளை கவனிக்கவும் ஆளில்லை,, பகலில் எரியும் விளக்குகளை அணைக்கவும் ஊழியர் இல்லை என அவர்கள் நொந்து கொள்கின்றனர்.
பொதுவாக உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியத்திற்கு தான் அதிக கட்டண பாக்கி வைத்திருக்கின்றன. அதற்கு இதுபோன்ற அலட்சிய போக்குகளும் காரணம்.