சசிகலா ஆதரவாளர்கள் மீது சிவி சண்முகம் போலீஸ் புகார்

0
1139

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில், சசிகலா பற்றி தான் பதில் அளித்ததை தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி வழியாக தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக முன்னாள் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் திண்டிவனம் உரோசனை காவல் நிலையத்தில் நேரில் புகார் அளித்துள்ளார்.


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சிவி.சண்முகம், ‘ கருவாடு கூட மீன் ஆகலாம், ஆனால் சசிகலா மீண்டும் அதிமுகவிற்கு வர முடியாது’ என்று பேசினார். இந்த நிலையில்தான் சசிகலாவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here